அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வுசெய்ய புதிய குழு

தமிழக கவர்னரின் முதன்மை செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–;

Update:2017-05-28 02:57 IST

சென்னை,

தமிழக கவர்னரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் வேந்தருமான வித்யாசாகர் ராவ், அந்த பல்கலைக்கழகத்துக்கான துணை வேந்தர் நியமனத்துக்காக 3 பேரின் பெயரை பரிந்துரைப்பதற்கான புதிய தேடுதல் குழுவை நியமிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு முன்பதாக அமைக்கப்பட்டிருந்த தேடுதல் குழு அளித்திருந்த பட்டியலை கவர்னர் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தேடுதல் குழுவுக்கு கவர்னரின் தரப்பு உறுப்பினராக சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா நியமிக்கப்பட்டுள்ளார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்