இளையராஜா வீடு முன்பு போராட்டம்: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது
இலங்கையில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இசையமைப்பாளர் இளையராஜா செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி அவர் வீடு முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது.
சென்னை,
இளையராஜா வீடு முன்பு நேற்று அந்த அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்திற்கு சட்டத்துறை செயலாளர் வை.இளங்கோவன் தலைமை தாங்கினார். வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இது குறித்து அவர்கள் கூறும்போது, ‘ரத்தக்கரை படிந்த சிங்கள இனவெறியர்களோடு இளையராஜா கைக்கோர்த்து நிற்கக்கூடாது என்பதே எங்களின் வேண்டுகோள். எனவே, ஜூலை மாதம் அவர் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தை கைவிட்டு உலகமெங்கும் வாழும் தமிழர்கள் ஒருங்கிணைந்து முன்னெடுத்துக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்று கூறினர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.