காசிமேட்டில் மீன் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும் மீனவர்களிடம் கங்கை அமரன் வாக்குறுதி

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரும், இசை அமைப்பாளருமான கங்கை அமரன் மீனவர்கள் வசிக்கும் பகுதியான காசிமேட்டில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2017-04-02 18:10 GMT

சென்னை,

அவர் மீனவர்களிடம் எம்.ஜி.ஆர். பாடலான தரை மேல் பிறக்க வைத்தான்... என்ற பாடலை பாடி வாக்கு திரட்டினார். மேலும் என்னை நீங்கள் வெற்றி பெறச் செய்தால் மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். காசிமேட்டில் மீன்பதப்படுத்தும் நிலையம் அமைத்து தருவேன் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

கங்கை அமரனுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கட்சியின் மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார், பொதுச்செயலாளர் கொட்டிவாக்கம் மோகன், செயலாளர் செம்மலர் சேகர் உள்பட நிர்வாகிகளும் பிரசாரம் செய்தனர்.

முன்னதாக நேற்று காலை கொருக்குப்பேட்டையில் அட்டை வியாபாரிகளைச் சந்தித்து கங்கை அமரன் தனக்கு ஆதரவு திரட்டினார். இரவு பழைய வண்ணாரப்பேட்டையில் இளைஞர்களிடையே கலந்துரையாடினார்.

மேலும் செய்திகள்