பாரிவேந்தரின் பெயரை பயன்படுத்த படஅதிபருக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருப்பவர் பாரிவேந்தர். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், வேந்தர் மூவிஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை எஸ்.மதன் நிர்வகித்து வருகிறார்.

Update: 2017-03-04 22:21 GMT

சென்னை,

என்னுடைய பெயர், புகைப்படம் ஆகியவற்றை அவர் பயன்படுத்துகிறார். எனவே, என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்தவும், இவற்றை பயன்படுத்தி ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை வெளியிடவும், விநியோகம் செய்யவும், தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், ‘பாரிவேந்தரின் பெயரையும், புகைப்படத்தையும் வேந்தர் மூவிஸ் நிறுவனம், அதன் உரிமையாளர் எஸ்.மதன் ஆகியோர் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. பாரிவேந்தரின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை வெளியிடுவதற்கும், வினியோகம் செய்வதற்கும் 4 வாரம் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கிற்கு பட அதிபர் எஸ்.மதன் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற 15–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்