தேர்தலில் நான் போட்டியிடுவதை விரும்பாமல் வதந்தி பரப்புகின்றனர் ஜெ.தீபா பேச்சு
நான் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பாத சிலர் வதந்திகளை பரப்புவதாக ஜெ.தீபா கூறினார்.
சென்னை,
பொதுவாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜெ.தீபா தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுவது வழக்கம். அதேபோல் நேற்று மாலை தன் வீட்டின் முன்பு கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:–
வதந்திஎன் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு தெரிவிக்க வந்த அனைவருக்கும் நன்றி. எங்களை செயல்பட விடாமல் பணிகளை முடக்க சில பேர் எனக்கு அரசியல் தெரியாது என்றும், நான் முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறேன் என்றும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
நான் தேர்தலில் போட்டி போடுவதை விரும்பாத சிலர் இப்படி செயல்படுகின்றனர். இதை மக்களாகிய நீங்கள் தான் கேட்க வேண்டும். என் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து நமது பேரவையின் வளர்ச்சிக்காக பணியாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.