இன்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டம்:சேலத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புஈரடுக்கு மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை

இன்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சேலத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் ஈரடுக்கு மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட உள்ளது.

Update: 2022-12-30 20:50 GMT

சேலம், 

புத்தாண்டு கொண்டாட்டம்

2022-ம் ஆண்டு நிறைவு பெற்று 2023-ம் ஆண்டு பிறக்கப்போகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. நட்சித்திர விடுதிகள், கேளிக்கை விடுதிகள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கி உள்ளது.

புத்தாண்டு கொண்டாத்தின் போது அசாம்பாவித சம்பவங்களை தடுக்க சேலம் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் இன்று மாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தலைமையில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், 5 ரோடு, அழகாபுர2000 policemen in Salem for securityம், அஸ்தம்பட்டி, கலெக்டர் அலுவலகம் அருகே என முக்கிய சந்திப்புகளில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.

ஈரடுக்கு மேம்பாலம்

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் இன்று இரவு போக்குவரத்துக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர்.

நடுரோட்டில் கேக் வெட்டுவது, சாலையில் தாறுமாறாக வாகங்களை ஓட்டுவது என பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறிப்பாக குடிபோதையில் வாகனங்களை விபத்தை ஏற்படுத்தும் வகையில் வேகமாக ஓட்டினால் அவர்கள் கைது செய்யப்படுவதுடன் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்