வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வேலூர் மண்டலத்தில் இருந்து, 200 சிறப்பு பஸ்கள் இயக்க உள்ளதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு வேலூர் மண்டலத்தில் இருந்து, 200 சிறப்பு பஸ்கள் இயக்க உள்ளதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நாளை வியாழக்கிழமை இரவு 11.59 மணிக்கு தொடங்கி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, வேலூர் மண்டலத்தில் இருந்து மொத்தம் 200 சிறப்பு பஸ்கள் நாளை காலை முதல் 2 நாட்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் டூ திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பேருந்துகள்https://t.co/XckqF5ynQX#Vellore | #tvmalai | #specialbuses #ThanthiTV
— Thanthi TV (@ThanthiTV) May 3, 2023