200 காளைகள் சீறிப்பாய்ந்த எருதுவிடும் விழா
ஆம்பூர் அருகே எருதுவிடும் விழாவில் 200 காளைகள் சீறிப்பாய்ந்தன.
ஆம்பூரை அடுத்த அரங்கல் துருகம் பகுதியில் நேற்று எருது விடும் திருவிழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன், மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இதில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு விழா தொடங்கியதும் வாடிவாசல் வழியாக விடப்பட்டன. அவை சீறிப்பாய்ந்து ஓடின. இதனை ஆம்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.
விழாவில் பங்கேற்று குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.