வெறிநாய் கடித்ததில் 6 பெண்கள் உள்பட 20 பேர் காயம்
திருவண்ணாமலை அருகே வெறிநாய் கடித்ததில் 6 பெண்கள் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.;
கலசபாக்கம்
திருவண்ணாமலை அருகே வெறிநாய் கடித்ததில் 6 பெண்கள் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு கிராமத்தில் நேற்று வெறிபிடித்த நாய் ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. அந்த வழியாக சென்றவர்களை வெறிநாய் விரட்டி விரட்டி கடித்தது.
இதில் 6 பெண்கள் உள்பட 20 பேரை கடித்தது. காயம் அடைந்த அவர்கள் அருகில் உள்ள நார்த்தாபூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றனர். இவர்களில் சிலர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே 20 பேரை கடித்த வெறிநாயை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து அடித்து கொன்றனர். இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.