திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக 378 மனுக்கள் பெறப்பட்டன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுவை கொடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 20 பேருக்கு ரூ.55 ஆயிரத்து 600 மதிப்பில் காதொலி கருவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயிரநாதன், மாற்றுத்திறனாளி நல அதிகாரி முருகேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.