2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை, போக்சோ வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொலை, போக்சோ வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொலை, போக்சோ வழக்கு
தூத்துக்குடி சாந்திநகரைச் சேர்ந்த மாடசாமி மகன் கார்த்திக் (வயது 32) என்பவர் கடந்த மாதம் 12-ந் தேதி தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே முன்விேராதம் காரணமாக கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தூத்துக்குடி செல்சினி காலனியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மாரிகண்ணன் (எ) கண்ணன் (24) என்பவரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.
அதுபோல் கடந்த மாதம் 14-ந் தேதி திருச்செந்தூர் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் காயல்பட்டினம் சிங்கித்துறை பகுதியைச் சேர்ந்த பெட்ரிக் மகன் அந்தோணி சாட்விக் (20) என்பவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இவர்கள் 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாரிகண்ணன், அந்தோணி சாட்விக் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.