புகையிலை பொருட்கள் கடத்தல் 2 வாலிபர்கள் கைது

திருவெண்ணெய்நல்லூர் அருகே புகையிலை பொருட்கள் கடத்தல் 2 வாலிபர்கள் கைது

Update: 2022-06-18 17:25 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆனந்தராஜ் மற்றும் நமச்சிவாயம் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் டி.குமாரமங்கலம் மற்றும் ஆனத்தூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் 8 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்த கருவேப்பிலைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் மகன் மேகநாதன்(வயது 24) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஆனத்தூர் பகுதியில் 17 பாக்கெட் புகையிலை பொருட்களை கடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜி மகன் மதியழகன்(30) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்