சாராயம் விற்ற 2 வாலிபர்கள் கைது

குள்ளஞ்சாவடி அருகே சாராயம் விற்ற 2 வாலிபர்கள் கைது

Update: 2023-05-05 18:45 GMT

குள்ளஞ்சாவடி

குள்ளஞ்சாவடி அருகே சுப்பிரமணியபுரம் கிராமத்தில் புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குள்ளஞ்சாவடி போலீசார் சுப்பிரமணியபுரம் நடுத்தெரு பகுதியை சேர்ந்த சங்கர் மகன் சின்னராசு(35), ஏழைமுத்து மகன் சிவமணி(34) ஆகியோர் வீடுகளில் சோதனை செய்தபோது வீட்டின் பின்புறம் 60 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து சின்னராசு, சிவமணி இருவரையும் கைதுசெய்த போலீசார் அவர்களிடம் இருந்து 60 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்