கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-01-27 21:54 GMT

ஈரோடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் மற்றும் போலீசார் பழைய பூந்துறை ரோட்டில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு கஞ்சா விற்ற ஈரோடு குயவன்திட்டு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 200 கிராம் எடை உள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் ஈரோடு அண்ணாமலை பிள்ளை வீதியில் நின்று கொண்டு கஞ்சா விற்ற ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபரை சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்