தொழிலாளர்கள் 2 பேர் தற்கொலை

உத்தமபாளையம், அல்லிநகரத்தில் 2 தொழிலாளர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.;

Update:2022-12-15 00:30 IST

உத்தமபாளையம் ஆர்.சி.வடக்கு தெருவை சேர்ந்தவர் சுதன் குமார் (வயது 28). கூலித்தொழிலாளி. இவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் அல்லிநகரம் மூக்கன் தெருவை சேர்ந்த துளசி ராஜன் (43). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கார்த்திகா. கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கார்த்திகா கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பின்னர் போலீஸ்நிலையத்தில் கார்த்திகா புகார் கொடுத்தார். அதன்பேரில் துளசிராஜனை போலீசார் அழைத்து விசாரித்தனர். இந்த நிலையில் மனமுடைந்த துளசிராஜன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்