பர்கூர் மலைப்பாதையில் குட்டியுடன் ரோட்டில் உலா வந்த 2 காட்டு யானைகள்- போக்குவரத்து பாதிப்பு

பர்கூர் மலைப்பாதையில் குட்டியுடன் ரோட்டில் உலா வந்த 2 காட்டு யானைகள்- போக்குவரத்து பாதிப்பு;

Update:2023-09-14 01:47 IST

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் 2 காட்டு யானைகள் நேற்று மாலை வெளியேறின. பின்னர் அவை பர்கூர் செல்லும் சாலையில் செட்டிநாடு என்ற இடத்துக்கு சென்றன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் சற்று தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். இதன் காரணமாக அந்தியூரில் இருந்து மைசூரு செல்லும் வாகனங்களும் மற்றும் மைசூருவில் இருந்து அந்தியூர் வரும் வாகனங்களும் ரோட்டின் இருபுறமும் நின்றன.

தொடர்ந்து காட்டுயானைகள் ரோட்டில் அங்கும் இங்குமாக உலா வந்தது. அதன்பின்னரே ரோட்டை கடந்து காட்டுக்குள் சென்றன. இதனை ஒரு சிலர் தங்கள் செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். யானைகளால் பர்கூர் மலைப்பாதை ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பர்கூர் வனத்துறையினர் கூறும்போது, 'பர்கூர் மலைப்பாதையில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றன. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் யாரும் ஹாரன் அடிக்க கூடாது. செல்போன் மூலம் காட்டுயானைகளை புகைப்படம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்