குடோனில் பதுக்கிய 2 டன் பிளாஸ்டிக் பறிமுதல்
கிருஷ்ணகிரியில் குடோனில் பதுக்கிய 2 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள கடைகளில் நேற்று நகராட்சி தலைவர் பரிதாநவாப் தலைமையில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சரவணன், சுகாதார அலுவலர்கள் மோகனசுந்தரம், துப்புரவு ஆய்வாளர்கள் சந்திரகுமார், உதயகுமார், கோவிந்தன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் சரவணன், எஸ்.சரவணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கார்னேசன் திடலுக்கு செல்லும் சாலையில் குடோன் ஒன்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற ஆய்வுக்குழுவினர், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்தனர். மேலும், குடோன் உரிமையாளரான ராஜஸ்தானை சேர்ந்த சிக்காராம் (30) என்பவருக்கு எச்சரிக்கை விடுத்தும், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க நகராட்சி தலைவர் உத்தரவிட்டார்.