2 கோவில்களில் சாமி நகை திருட்டு

திசையன்விளை, ராதாபுரம் அருகே 2 கோவில்களில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்

Update: 2022-12-19 21:56 GMT

திசையன்விளை:

திசையன்விளை, ராதாபுரம் அருகே 2 கோவில்களில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருட்டு

திசையன்விளை அருகே அழகப்பபுரத்தில் வட பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை கோவில் பூசாரி சுந்தரமூர்த்தி வந்தார். அப்போது கோவில் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு, நடை திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க பொட்டு சங்கிலி, தங்ககாசு, வெள்ளி கிரீடம், தங்க கல் நகைகள் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா முத்துசாமி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்.

மற்றொரு கோவில்

இதேேபால் ராதாபுரம் அருகே சிவசுப்பிரமணியபுரத்தில் உள்ள சுடலைமாட சுவாமி கோவிலில் புகுந்த மர்ம நபர்கள், சுவாமி கழுத்தில் கிடந்த தங்க கண்மலர், 2 தங்க சங்கிலிகளை திருடி, மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதுதொடர்பான காட்சிகள் அங்கு இருந்த கண்காணிப்பு ேகமராவில் பதிவாகி இருந்தது.

அதில் பதிவாக உள்ள மர்மநபர்கள் உருவங்களை வைத்து ராதாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்