2 வாலிபர்கள் மூச்சு திணறி பலி
தூசி அருகே ஜெனரேட்டர் அறையில் தூங்கிய 2 வாலிபர்கள் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர்.
தூசி
தூசி அருகே ஜெனரேட்டர் அறையில் தூங்கிய 2 வாலிபர்கள் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர்.
ஜெனரேட்டர் அறையில் தூங்கினர்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சேனியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகன் மதன் (வயது 18), இவரது நண்பர் வெங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சேட்டு மகன் சரவணன் (21). இவர்கள் இருவரும் எலக்ட்ாீசியன்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் 2 பேரும் தூசி அருகே அவர்கள் பணியாற்றும் கிரிஜாபுரம் கிராமத்தில் உள்ள சவுண்ட் சர்வீஸ் கடையில் தூங்கினர்.
அப்போது மின்தடை ஏற்பட்டதால் கடையில் இருந்த ஜெனரேட்டர் அறைக்கு சென்று ெஜனரேட்டரை ஆன் செய்துவிட்டு கதவை மூடிவிட்டு உள்ளே தூங்கினர்.
மூச்சு திணறி 2 பேர் பலி
இன்று காலை 9 மணி அளவில் சுமன் என்ற ஊழியர் கடையை திறந்த போது கடை முழுவதும் புகை மண்டலமாக இருந்தது. அப்போது கடையில் இருந்த மதன் மற்றும் சரவணன் மிகவும் ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தனர்.
உடனே அவர்களை காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே மூச்சு திணறி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சகாதேவன் தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மூச்சு திணறி 2 வாலிபர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.