விபத்தில் 2 வாலிபர்கள் பலி

விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

Update: 2022-07-23 19:47 GMT

கீழப்பழுவூர்:

சாலையில் விழுந்தனர்

பெரம்பலூர் மாவட்டம் ஜமீன்ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த செங்கமலையின் மகன் விக்கி(வயது 19). அதே பகுதியை சேர்ந்த பழனியாண்டியின் மகன் ஆகாஷ்(19). நண்பர்களான இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கீழப்பழுவூர் அருகே வந்தனர். பின்னர் மீண்டும் ஜமீன் ஆத்தூர் நோக்கி திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். மேலப்பழுவூர் புறவழிச்சாலை பாலம் அருகே வந்தபோது அவர்களது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில், நிலைதடுமாறி 2 பேரும் சாலையில் விழுந்தனர்.

2 பேர் சாவு

அப்போது பின்னால் சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த லாரியின் சக்கரம் 2 பேர் மீதும் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே விக்கி, ஆகாஷ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார், அங்கு விரைந்து வந்து 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகம்

கீழப்பழுவூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் நேற்று முன்தினம் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றும் விபத்தில் 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்