மராட்டிய விபத்தில் சிக்கி 2 தமிழர்கள் பலி: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

மராட்டிய விபத்தில் சிக்கி 2 தமிழர்கள் பலியான சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-01 19:01 GMT

கோப்புப்படம்

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மராட்டிய மாநிலத்தில் தானேவின் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் பாலம் கட்டும் பணியின்போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் நடந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதில் இருவர் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். விபத்தில் இறந்த தமிழ்நாட்டைச்சேர்ந்த இருவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

விபத்தில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்