கொடிக்காய்புளி பறித்தபோது விபரீதம் மரத்தில் இருந்து ஓடையில் விழுந்த 2 மாணவர்கள் பலி

கொடிக்காய்புளி பறித்தபோது, மரத்தில் இருந்து தவறி ஓடையில் விழுந்த 2 மாணவர்கள், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.;

Update: 2023-05-10 20:45 GMT

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்கபுரத்தை சேர்ந்த சிங்கராஜ் என்பவருடைய மகன் சிவபிரசாத் (வயது 12). சிவகாமிபுரம் அரசு பள்ளியில் படித்து வந்தான். இனி 7-ம் வகுப்புக்கு செல்ல இருந்தான்.

தென்காசி மாவட்டம் பால்வண்ணபுரம் கிராமத்தை சேர்ந்த ராமராஜ் என்பவருடைய மகன் சரண் (8). இவனும் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான். இவர்கள் உறவினர்கள்.சிறுவன் சரணின் பாட்டி வீடு சிவபிரசாத் வீட்டின் அருகே உள்ளது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், பாட்டி வீட்டுக்கு சரண் சென்று இருந்தான். நேற்று அங்கு சிவபிரசாத், சரண் உள்ளிட்ட சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

மரத்தில் இருந்து விழுந்தனர்

அச்சங்குளம் கண்மாய் பகுதிக்கு சென்று, அங்குள்ள ஓடை கரையில் இருந்த மரத்தில் ஏறி சிறுவர்கள் கொடிக்காய்புளி பறித்தனர்.

இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக சிவப்பிரசாத், சரண் ஆகிய 2 பேரும் தவறி ஓடைக்குள் விழுந்து, அங்கு தேங்கி இருந்த தண்ணீரில் மூழ்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

உறவினர்கள் ஓடி வந்து தண்ணீரில் இறங்கி 2 சிறுவர்களையும் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதித்தபோது, 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்