கஞ்சா விற்ற 2 மாணவர்கள் கைது

கஞ்சா விற்ற 2 மாணவர்கள் கைது

Update: 2023-04-01 18:45 GMT

பெ.நா.பாளையம்

கோவை ஒத்தக்கால் மண்டபம் பொன் நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சூர்யா(வயது 19). அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதேபோன்று குன்னூர் காட்டேரி நகரை சேர்ந்த ஜெகன்நாதன் என்பவரது மகன் முத்து குமார்(21). பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் சூர்யா, முத்துகுமார் ஆகியோர் பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபிள்யு. பிரிவு அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கஞ்சா விற்றது உறுதியானது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்