திருப்பரங்குன்றம் கோவிலில் ஒரே நாளில் 2 விசேஷம்

திருப்பரங்குன்றம் கோவிலில் ஒரே நாளில் 2 விசேஷம் நடந்தது.

Update: 2023-06-15 20:22 GMT

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலின் கருவறையில் எங்கும் காணக்கிடைக்காத அற்புதமாக 5 சன்னதிகள் தனித்தனியாக அமைந்து உள்ளன. அதில் ஒன்றாக சத்தியகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஆகவே கம்பத்தடி மண்டபத்தில் சத்தியகிரீஸ்வரரின் வாகனமான நந்தி (பெரியவிக்ரம்) அமைந்துள்ளது. பிரதோஷ தினத்தில் நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். இதேபோல இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை அன்று தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதி உலா நடந்துவருகிறது. வைகாசி மாதத்தில் நேற்று ஒரே நாளில் சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷமும், முருகப்பெருமானுக்கு உகந்த கார்த்திகையும் ஒன்றாக வந்தது. இதனையொட்டி கோவிலின் கருவறையில் சத்தியகிரீஸ்வரருக்கும், கம்பத்தடி மண்டபத்தில் உள்ள மகாநந்திக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாத கார்த்திகையையொட்டி உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. தங்க மயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்