ஆடு திருடிய 2 பேருக்கு வலைவீச்சு

ஏர்வாடி அருகே ஆடு திருடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

Update: 2022-12-19 21:14 GMT

ஏர்வாடி:

திருக்குறுங்குடி நம்பிதோப்பு ராமானுஜம் புதுத்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் சேவை நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் நம்பிதலைவன் பட்டயத்தில் உள்ளது. அங்கு அவர் 21 ஆடுகள் வளர்த்து வருகிறார். ஆடுகளை நம்பிராஜன் பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் நம்பிராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ஆடுகளை பராமரிக்க அயன் சிங்கம்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துக்குமாரை நியமித்தார். அவரும் ஆடுகளை பராமரித்து வந்தார். பின்னர் நம்பிராஜன் உடல்நிலை சீரானதையடுத்து அவர் வேலைக்கு வந்தார். அவர் ஆடுகளை பார்த்த போது 6 ஆடுகள் மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி பிரபாகரனிடம் தெரிவித்தார். இதுகுறித்து பிரபாகரன் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆடுகளை திருடிய முத்துக்குமார், மூர்த்தியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்