மணல் கடத்திய 2 பேர் கைது

மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-20 19:14 GMT

அரியலூர் மாவட்டம் வி.கைக்காட்டி அருகே மணல் கடத்தப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் அரியலூர் ஆர்.டி.ஓ. தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வி.கைக்காட்டி நோக்கி சென்ற 2 டிராக்டர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது டிராக்டர்களில் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. விசாரணையில் கொலையனூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 21), நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (17) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மணல் கடத்தி சென்ற 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து கயர்லாபாத் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து தேளூர் கிராம நிர்வாக அதிகாரி ராஜாஜி கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்