பீர் பாட்டிலால் தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
பீர் பாட்டிலால் தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்குடியான் பட்டியை சேர்ந்த பொன் ராமு மகன் கனி ராமு (வயது 23). தொழிலாளி. இவர், அண்டக்குளம் டாஸ்மாக் கடையில் நேற்று இரவு மது வாங்கி விட்டு மீதி 5 ரூபாயை விற்பனையாளரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பரவயல் கருனேந்திரன் மகன் ஹரிஷ் (22), திருநல்லூர் பழனிவேல் மகன் விவேக் (22) ஆகிய 2 பேரும் சேர்ந்து கனிராமுவிடம் 5 ரூபாய் வாங்காமல் போக மாட்டியா? என கேட்டு தகராறு செய்துள்ளனர். இதில் விவேக், கனி ராமுவின் இரண்டு கைகளையும் பிடித்து கொள்ள ஹரிஷ் பீர் பாட்டிலால் கனிராமு மண்டையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உடையாளிப்பட்டி போலீஸ் சப்-இ்ன்ஸ்பெக்டர் மாயழகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரிஷ், விவேக் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.