பழனி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

பழனி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-07-15 21:48 IST

பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில், பழனி தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், அவர்கள் பாலசமுத்திரத்தை சேர்ந்த ரங்கசாமி (வயது 26), கோட்டைமுத்து (26) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 90 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்