வீட்டின் கதவை உடைக்க முயன்ற 2 பேருக்கு தர்ம அடி
கரூர் அருகே வீட்டின் கதவை உடைக்க முயன்ற 2 பேருக்கு தர்ம அடி கொடுத்தனர்.;
கதவை உடைக்க முயற்சி
கரூர் வெண்ணைமலை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ஒரு வீட்டை நோட்டமிட்டுள்ளனர்.வீடு பூட்டியிருப்பதாக நினைத்து வீட்டின் முன்பக்க கதவை உடைக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது, வீட்டினுள் இருந்த பெண்,அருகில் இருந்த கணவருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து உடனடியாக வந்த அவர், வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த நபர்களை பார்த்து யாரு நீ எதற்காக கதவை உடைக்கிறாய் என சத்தம் போட, இருசக்கர வாகனத்தையும், கொண்டு வந்த பையையும் விட்டு விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். அப்போது அவர்களை தேடிய போது பஸ் ஏறி சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.
தர்ம அடி
இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பஸ்சை விரடிச் சென்று மண்மங்கலம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி திருட முயன்ற 2 பேரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனை தொடர்ந்து வெங்கமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்து, 2 நபரையும் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை செய்ததில், அவர்கள் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 46), சென்னையை சேர்ந்த சுந்தரராஜ் (22) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து இவர்களிடம் வெங்கமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.