அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது

சுவாமிமலை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்;

Update:2023-10-10 02:22 IST

கபிஸ்தலம்;

சுவாமிமலை போலீசார் சுவாமிமலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுவாமிமலை காவிரி ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் அள்ளிச் சென்ற 2 பேரை வழிமறித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் காவிரி ஆற்றில் எவ்வித அரசு அனுமதி இன்றி மணல் அள்ளி வந்ததும் அவர்கள் திருவலஞ்சுழியை சேர்ந்த சேகர்(வயது55), பொன்னுசாமி(56) என தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார் மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கருணாகரனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்