திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று மன்னார்புரம்- வள்ளியூர் சாலையில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரையும் நிறுத்தி சோதனை செய்தனர். ேமாட்டார் சைக்கிளில் 135 பாக்கெட் புகையிலை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக சமூகரெங்கபுரம் பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்த முருகன் (வயது 42), அய்யப்பன் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து புகையிலை பாக்கெட்டுகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.