மதுவிற்ற 2 பேர் கைது
திண்டுக்கல் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லை அடுத்த ஏ.வெள்ளோடு, கள்ளிப்பட்டி பகுதிகளில் அனுமதியின்றி மதுபானம் விற்கப்படுவதாக திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜனுக்கு புகார் வந்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் ரோந்து செல்ல போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் ஏ.வெள்ளோடு, கள்ளிப்பட்டி பகுதிகளில் தீவிர ரோந்து சென்றனர்.
அப்போது அந்த பகுதிகளில் சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ஏ.வெள்ளோடு பகுதியை சேர்ந்த ஜான் பீட்டர் (வயது 40), கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த எட்வின் (25) என்பதும், மதுபானம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 100 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.