சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-10-23 18:45 GMT

நாகை மாவட்டம், கீழ்வேளூர் போலீஸ் சரகம் கீழகாவாலக்குடி, சங்கமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெண்மணி அருகே கீழகாவாலக்குடி காளவாய்கரை பகுதியில் சாராயம் விற்ற நுகத்தூர்தெற்கு தெருவை சேர்ந்த முருகையன் (வயது 65), சங்கமங்கலம் பிரிவு சாலையில் சாராயம் விற்ற பாப்பாகோவில் அருகே சின்னநரியங்குடியை சேர்ந்த மாடசாமி (52) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்