வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் போலீசார் அப்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேளூர் மற்றும் கல்லங்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் வெண்மான்கொண்டான் பள்ளி தெருவை சேர்ந்த மோகன்(வயது 56), கல்லங்குறிச்சி ரவுண்டானா பகுதியில் மது விற்ற பெரம்பலூர் கார்குடி தெற்கு தெருவை சேர்ந்த ராஜா(33) ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.