மது விற்ற 2 பேர் கைது
வீரபாண்டியில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உப்புக்கோட்டை பகுதியில் மது விற்ற உப்புக்கோட்டை மேல தெருவை சேர்ந்த தலக்குமணி (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், உப்புக்கோட்டையில் மது விற்ற சின்னன் (56) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.