கத்தியை காட்டி வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
கத்தியை காட்டி வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் இடையார் மேலத்தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகன் விக்னேஷ் (வயது 26). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று அரியலூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். உடையார்பாளையம் தான்டான் ஏரி அருகே சென்றபோது, உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த மதியழகனின் மகன் தவசி(19), இவரது நண்பர் திருச்சி அரியமங்கலம் இந்திராநகரை சேர்ந்த தவசீலனின் மகன் கணேஷ் (20) ஆகிய 2 பேரும் சேர்ந்து, விக்னேஷை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.500-ஐ பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் விக்னேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ், தவசி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.