பணம் பறித்த 2 பேர் கைது

பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-16 19:09 GMT

திருச்சி பெரியமிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (29), இவர் திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு டிபன் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் திருச்சி அண்ணாநகர் வடக்கு காட்டூர் பகுதியை சேர்ந்த கோபால் (27) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1500-ஐ பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலை கைது செய்தனர்.இதேபோல திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (55) இவர் காஜாபேட்டை மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மதன் (32) என்பவர் அண்ணாதுரையிடம் கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன் என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்