கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

தூசி அருகே கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-07-08 22:34 IST

தூசி

தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசாார் இன்று ஆக்கூர் கூட்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மடக்கி விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் வந்தவாசி தாலுகா வெண்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த மன்சூர் (வயது 30) மற்றும் வெம்பாக்கம் தாலுகா உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவர் என்பதும், கஞ்சா விற்பது தெரிய வந்தது.

பின்னர் அவர்களின் பாக்கெட்டில் இருந்த 10 கிராம் எடை கொண்ட 2 பாக்கெட்டு கஞ்சாவையும், மோட்டார்சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்