பொம்மிடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் சிக்கினர்

பொம்மிடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் சிக்கினர்.

Update: 2023-07-17 18:45 GMT

பொம்மிடி அருகே உள்ள நடூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் பொம்மிடியில் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபர் திருடிச்சென்றார். இது தொடர்பாக முருகேசன் அளித்த புகாரின் பேரில் பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பொம்மிடியை சேர்ந்த சச்சின் குமார் (வயது 25), பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த கலையரசன் (24) ஆகியோர் இந்த மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருடிய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்