லாரியில் பேட்டரி திருடிய 2 பேர் சிக்கினர்
லாரியில் பேட்டரி திருடிய 2 பேர் சிக்கினர்
உசிலம்பட்டி, கருமாத்தூர் கேசவன்பட்டியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 64). சம்பவத்தன்று இவர் கோச்சடை மாநகராட்சி வாகனம் நிறுத்தும் இடத்தில் தனது லாரியை நிறுத்தி இருந்தார். அப்போது மர்மநபர்கள் லாரியில் இருந்த பேட்டரிகளை திருடி சென்றனர். இது குறித்து அவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் லாரியில் பேட்டரியை திருடியதாக ஆரப்பாளையம் பெத்தானியாபுரத்தை சேர்ந்த ஸ்டாலின்மரியராஜ் (36), பாலமுருகன் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.