பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் 2 பேர் கைது
பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் 2 பேர் கைது
விருதுநகர்
விருதுநகர் சின்னையா பள்ளிக்கூடத்தை சேர்ந்தவர் வசந்த் (வயது 22). மதுரை மாவட்டம் குச்சம்பட்டியை சேர்ந்தவர் மகேஷ் கண்ணன். இவர்கள் இருவரும் விருதுநகர் பழைய பஸ் நிலையத்திற்குள் 110 கிராம் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த மேற்கு போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.