2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
காட்பாடி போலீசார் திருட்டு வழக்கு தொடர்பாக தாராபடவேடு பகுதியை சேர்ந்த பலராமன் (வயது 27), பாரதிநகரை சேர்ந்த சீனிவாசன் (26) ஆகியோரை கைது செய்து, வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.