சித்தப்பாவை அரிவாளால் வெட்டிய வாலிபர் உள்பட 2 பேர் கைது

சொத்து தகராறில் சித்தப்பாவை அரிவாளால் வெட்டிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-21 18:30 GMT

சொத்து தகராறு

ஜெயங்கொண்டம் அருகே உள்ள வட வீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 50), கோவில் பூசாரி. இவருக்கும், இவரது அண்ணன் பாலகிருஷ்ணனுக்கும் (53) இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில், பாலகிருஷ்ணன் கடந்த வாரம் சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு சென்றபோது பாலையாவிடம் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணனின் மகன் தாமரைச்செல்வன் (24) தனது நண்பருடன் சேர்ந்து கடந்த 20-ந் தேதி பாலையாவை கத்தி மற்றும் அரிவாளால் பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளனர்.

2 பேர் கைது

இதில், படுகாயம் அடைந்த பாலையாவை அவரது உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் வழக்குப்பதிவு செய்து சித்தப்பாவை அரிவாளால் வெட்டிய தாமரைச்செல்வன் மற்றும் வசீகரன் (21) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்