குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-10-21 22:09 GMT

பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் விஷ்ணுபுரம் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் என்ற விருமாண்டி (வயது20). இவர் மீது பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் இருந்து வந்தது. மேலும், இவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பூப்பாண்டி போலீசார் கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக விக்னேசை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் விக்னேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து விக்னேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் நாகர்கோவில் சிறையில் இருந்த விக்னேசை குண்டர் சட்டத்தில் கைது செய்து அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இதேபோல் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த பேச்சிமுத்து என்ற இசக்கி (23) என்பவரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இவர் மீது ஒரு கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்