சின்னசேலம் அருகேமுன்விரோத தகராறு; 2 பேர் கைது

சின்னசேலம் அருகே முன்விரோத தகராறில் 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-08-19 18:45 GMT


சின்னசேலம், 

சின்னசேலம் அருகே மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 40). விவசாயி. இவரது மனைவி அருள்மொழி (38). இளையராஜாவும் அதே பகுதியில அவரது அண்ணன் அண்ணன் செல்வராஜ் என்பவருக்கும் இடையே நிலபிரச்சினை காரணமாக முன்விரோதம் உள்ளது.

சம்பவத்தன்று, அருள்மொழி நிலத்திற்கு செல்லும் போது, அவருக்கு இடையூறு செய்து வந்துள்ளனர். இதுபற்றி அருள்மொழி தடிக்கேட்டுள்ளார். அப்போது செல்வராஜ் , அவரது மனைவி தேன்மொழி, மகன்கள் தனசேகர், செல்வம் ஆகியோர் சேர்ந்து அருள் மொழியை திட்டி தாக்கி உள்ளனர். இதில் இருதரப்பினரும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சின்னசேலம் போலீசில் அருள்மொழி கொடுத்த புகாரின் பேரில் செல்வராஜ், தேன்மொழி, தனசேகர், செல்வம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேன்மொழியை கைது செய்தனர்.

இதேபோன்று செல்வராஜ் மனைவி தேன்மொழி கொடுத்த புகாரின் பேரில் இளையராஜா, அருள்மொழி, குமரவேல் மனைவி கலைச்செல்வி, குமரவேல் மகன் அஜித்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வியை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்