அனல்மின் நிலையத்தில் ரூ.50 ஆயிரம் இரும்பு பொருட்களை திருடிய 2 பேர் கைது

அனல்மின் நிலையத்தில் ரூ.50 ஆயிரம் இரும்பு பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-09 08:40 GMT

மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு கிராமத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் புதிய அனல்மின் நிலையத்தில் 660 மெகாவாட் திறன் கொண்ட 2 யூனிட்டுக்களில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

இங்கு பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இரும்பு பொருட்கள் திருடு போவதாக தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அனல்மின் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 2 பேரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் இவர்கள் மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அன்புகுமார் (40) என்பதும் அனல் மின் நிலையத்தில் ரூ.50 அயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்