பண்ருட்டி அருகே ஆடுகள் திருடிய 2 பேர் கைது

பண்ருட்டி அருகே ஆடுகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2022-08-25 16:23 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி அடுத்த காட்டு வேகா கொல்லையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். விவசாயி. சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகில் கட்டப்பட்டிருந்த 2 ஆடுகளை 2 பேர் திருடிக்கொண்டு முந்திரிதோப்பு வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

சத்தம் கேட்டவுடன்,பாலகிருஷ்ணன் அவர்களை துரத்தி சென்றார். அப்போது அங்குள்ள மரத்தில் மோதி, அவா்கள் கீழே விழுந்தனர். உடன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் பிடித்து காடாம்புலியூர் போலீசில் ஒப்படைத்தார்.

போலீஸ் விசாரணையில், அவா்ள்  சின்ன காட்டுசாகையை சேர்ந்த சாரங்கபாணி மகன் அஜித் குமார் (வயது 25), ரகுபதி மகன் விஜயராகவன் (22) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்