ஆடு திருடிய 2 பேர் கைது

தூத்துக்குடியில் ஆடு திருடிய 2‌ பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-09 18:45 GMT

தூத்துக்குடி திரு.வி.க நகரை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கோட்டைசாமி (வயது 32). இவரின் ஆடு கடந்த 7-ந்தேதி அவரது வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்தபோது, மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியை சேர்ந்த சிவபெருமாள் மகன் தங்ககுமார் (22), தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்த பொன்ராஜ் மகன் ஜெகன்ராஜ் (20) ஆகியோர் கோட்டைசாமியின் ஆட்டை மோட்டார் சைக்கிளில் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் கைது செய்து ஆடு மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தார். தங்ககுமார் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது. ஜெகன்ராஜ் மீது தென்பாகம் போலீசில் ஒரு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்