முதியவரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

நெல்லை டவுனில் முதியவரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-09 19:56 GMT

நெல்லை மாவட்டம் களக்காடு சடையமான்குளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 65). சமையல் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று நெல்லை டவுன் மேற்கு ரதவீதியில் நின்றுக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், முருகனிடம் பேச்சு கொடுப்பது போல் பேசி அவர் வைத்து இருந்த பையை பறித்துக்கொண்டு சென்றனர். அந்த பையில் ஒரு செல்போன், ஒரு சட்டை, வேட்டி இருந்ததாம்.

இதுகுறித்து அவர் நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் மேலப்பாளையத்தை சேர்ந்த அப்துல் பஷீத் (25), அவருடைய அண்ணன் அரபத் மற்றும் ஒருவர் ஆகியோர் இந்த சம்பவத்தில் தொடர்புடையது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அப்துல் பஷீத், அரபத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்