லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

Update: 2023-04-18 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மந்தக்கரை, வடக்கு தெரு ஆகிய இடங்களில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், பிரியங்கா மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துகொண்டிருந்த விழுப்புரம் மந்தக்கரை புதுத்தெருவை சேர்ந்த தனசேகரன்(வயது 31), புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் கூணிச்சம்பட்டை சேர்ந்த செந்தில்(39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்த குரு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்